ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 64.86 சதவிகித வாக்குகள் பதிவாகின. இன்று தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 47.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக பாகூரில் 53.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்தாராவில் 52.21% வாக்குகளும், ராம்கரில் 51.26% வாக்குகளும், தும்கா மாவட்டத்தில் 50.28% வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக பொகாரோவில் 42.52% வாக்குகள் பதிவாகியுள்ளன.